மனித மேம்பாட்டுக் கல்விமுறைக் கண்காட்சி

மனித உன்னதத்தை நோக்கிய சத்திய சாயி மனித மேம்பாட்டுக் கல்வி முறைக் கண்காட்சி 30.10.2016  காலை 09.30 மணியளவில் யாழ். சன்மார்க்க மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

வடபிராந்திய சத்திய சாயி சர்வதேச நிறுவனத்தின் தலைவர் கே. வி. சிவனேசன் தலைமையில் ஆரம்பமான இந்தக் கண்காட்சியில் யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளர் ஆ. தெய்வேந்திரராஜா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு கண்காட்சியை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இந்த நிகழ்வில் யாழ். சன்மார்க்க வித்தியாலய அதிபர் ஆ. முரளிதரன் யாழ்ப்பாணக் கல்வி வலய ஆரம்பக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் மைதிலி தேவராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.

கண்காட்சியில் பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா அறிமுகப்படுத்திய மனித மேம்பாட்டுக் கல்வி முறை பற்றிய காட்சிகளும் அது தொடர்பான விளக்கங்களும் இடம்பெற்றிருந்தன.

குறிப்பாக மனத்தை ஒருமுகப்படுத்துவது எவ்வாறு? மனித மேம்பாட்டுக் கல்வியின் நன்மைகள், ஆன்மீகம், ஆன்மீகத் தடைகளை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள், மனிதரைத் தாக்கும் நோய்கள், நோய்களை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள், சமூகச் சீரழிவுகளும் அதனைத் தடுப்பதற்கான வழிமுறைகளும் உள்ளிட்ட பல்வேறு காட்சிப் படுத்தல்களும் இடம்பெற்றிருந்தன.

மேலும் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் அறிவுரை சொல்லும் வகையிலான பொம்மலாட்டமும் இதன் போது நடைபெற்றது.

இதேவேளை மனித மேம்பாடுகள் நலிவடைந்து போயுள்ள இக் கால நிலைமையினைச் சீர்திருத்துவதற்குக் கல்வி முறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். என வடபிராந்திய சத்திய சாயி சர்வதேச நிறுவனத்தின் தலைவர் கே.வி சிவனேசன் தெரிவித்தார்.

இந்தக் கண்காட்சியானது செவ்வாய்க்கிழமை வரை நடாத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Education Murasu

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment