Chemical Engineering துறையின் சிறப்புகள்





Civil Engineering, Mechanical Engineering போன்று இன்று இளைஞர்களிடையே பிரபலமடைந்த துறையாக Chemical Engineering துறை விளங்குகிறது.

அறிவியல் வளர்ச்சியின் முக்கிய மூல காரணியான மூலப் பொருட்களின் அடிப்படையில் இருந்து உருவாக்கப்படும் அத்தனை பொருட்களும் ரசாயனம் சார்ந்ததாகவே இருக்கிறது.

இந்த வேதி பொருட்களை பயனுள்ள விலை மதிப்புள்ள பொருட்களாக மாற்றுவது தொடர்பான படிப்பே Chemical Engineering ஆகும்.

காலையில் நாம் உட்கொள்ளும் உணவு முதல், நொறுக்கு தீனிகள், குளிர்பானங்கள் என எல்லாவற்றிலும் கெமிக்கல் பொருள் நுட்பங்கள் நிறைந்திருக்கும்.

இந்த துறையின் மூலம் கனிம வேதி பொருட்கள், மீள் பொருட்கள், பூச்சி கொல்லிகள், சோப்புகள், மருந்து பொருட்கள், வாசனை திரவியங்கள் போன்றவை பல்வேறு கெமிக்கல் நிறுவனங்களில் தான் உற்பத்தி செய்யபடுகின்றன.

இந்த துறையை தேர்ந்தெடுப்பவர்கள் உடல் நலத்துக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும், ஏனென்றால் ரசாயனத்தை சுற்றி தான் படிப்பும், வேலைவாய்ப்பும் இருக்கும்.

வேலைவாய்ப்பு இந்த துறையில் அதிக அளவில் உள்ளது. பொருட்களை உருவாக்குவதற்கும், வடிவமைப்பதற்கும் Chemical Engineering சம்மந்தமான தொழிற்சாலையில் வேலைகள் ஏராளம் உள்ளது.

மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், பெட்ரோலியம் தயாரிப்பு நிறுவனங்கள், உணவு உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் ரசாயனம் தொடர்பான அரசு நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புகள் கணிசமான அளவில் உள்ளது.
Share on Google Plus

About Education Murasu

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment